Ad Code

Responsive Advertisement

Some facts about lions

              சிங்கதோட சில உண்மைகள்


சிங்கங்கள் பெரியவை என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். சிங்கங்கள் 230 kg எடை வரையிலும் 10 அடி நீளமும்  வளரகூடியது. புலிகளுக்குப் பிறகு பூனை குடும்பத்தின் இரண்டாவது பெரிய விலங்கு இதுதான்.ஆனால் இங்கே சில விஷயங்கள் சிங்ககளை பற்றி அறிந்திருக்கமாட்டீர்கள்.

சிங்கத்தோடா கர்ஜனை ஐந்து கிலோமீட்டர் தாண்டி கேட்க கூடியது. இடியை போன்று  இருக்க கூடியது.
சிங்கம் குட்டி பிறந்த உடன் கர்ஜிக்க தொடங்கிவிடும்.
ஆனால் அவற்றின் குரல்கள் சிறிய அளவிலேயே இருக்கும்.ஆனால் அது ஒரு வயது கடந்தயுடன் பெரிய அளவில் கர்ஜனை இருக்கும்.

குடும்பமாகவாழும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த குடும்பத்தில் 5லிருந்து  40 வரை சிங்கங்கள் இருக்கும். இக்குடும்பத்தில் ஆண் சிங்கம் தலைவராகவும் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும்.
சில நேரங்களில் இரண்டு முதல் மூன்று முன்னணி ஆண் சிங்கங்கள் இருக்கும்.

சிங்கக்குட்டிகளை பெரும்பாலும்  பெண்கள் இனங்களே வளர்க்கும். இது வேட்டையாடி சாப்பிடகூடியது. ஒரே குழுவாக இணைந்து வேட்டையாடும். ஆனால் சிங்கங்கள் மிகவும் வெற்றிகரமான வேட்டைக்காரர்கள் அல்ல.

வேட்டையில் 30% மட்டுமே வெற்றி பெறுகின்றன. அவற்றின் இரையான ஜீப்ராக்கள் மற்றும் மான் போன்றவை பொதுவாக  வேகமாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆனால் சிங்கங்கள் ஒன்றாக வேலை செய்வதன் மூலம் சிங்கங்கள் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.தங்கள் இரையை கழுத்தை பிடித்து  அதை கொன்றுவிடுகிறது. அவை ஒரு நாளைக்கு 10 kg  இறைச்சி மற்றும் சில கிட்டத்தட்ட 40 kg  விழுங்கும் திறன் கொண்டது.

ஒரு காலத்தில் சிங்கங்கள் உலகம் முழுவதும் பரவிகிடந்தன. சுமார் 125 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல சிங்கங்களின் கிளைகள் பல இருந்தன.
இதில் ஐரோப்பாவின் சிங்க குகை மற்றும் அமெரிக்கவில் lions of North America
துரதிர்ஷ்டவசமாக இரண்டும் அழிந்துவிட்டது.
அவைகளை வேட்டையாடுவதும் வாழ்விடமும்  குறைந்து போனது.

சிங்கங்கள் ஆபத்தானவை என பட்டியலிடப் பட்டுள்ளன. கம்பீரமான தோற்றம் கொண்டதாலும் மிகவும் வலிமையானதும் இதை இன்றைக்கும்
மிருகங்களின் ராஜாவாக கருதப்படுகின்றன

                                             நன்றி

Post a Comment

0 Comments